பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் காவலர் சஸ்பெண்ட்

பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 14, 2021, 12:41 PM IST
பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் காவலர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை காவலராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

காதல் திருமணம் (Love Marriage) செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் இவருக்கு அவரது மைத்துனர் மனைவியுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை கோவை வாலாங்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மைத்துனர் மனைவியும், பாலாஜியும் அமர்ந்து பேசி வந்துள்ளனர்.

ALSO READ | கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!

அப்போது இவர்கள் இருவரும் பொது இடத்தில், பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபடவே அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் அக்காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்ததுடன் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி இருவரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

சீருடை அணிந்தபடி, காவலர் ஒழுங்கீனமாக பொது இடத்தில் செயல்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், வீடியோவில் இருந்தவர் மாநகர காவல்துறையின் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் பாலாஜி என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொது இடத்தில், அத்துமீறி நடந்து கொண்டதாக, காவலர் பாலாஜியை பணியிடை நீக்கம் செய்து, ஆயுதப்படை துணை ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.

ALSO READ | ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News