Ration Card Big Update Tamil | தமிழ்நாடு அரசு ரேஷன் அரிசி விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் கார்டு மூலம் வாங்கும் ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் மக்கள் விற்பனை செய்வதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக புகார் எழுந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளசந்தையில் வாங்கப்படும் ரேஷன் அரிசி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனர். இங்கு 6 ரூபாய்க்கு வாங்கும் ரேஷன் அரிசியை இடைத்தரகர்கள் வெளி மாநிலங்களில் 15 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இன்னும் சிலர் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து அரிசி மார்க்கெட்டிலும் விற்பனை செய்கின்றனர். மிக முக்கியமாக இட்லி மாவு தயாரிக்கவே ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இளைஞர் பைசல் என்பவர் இட்லி மாவு தயாரிக்க ரேஷன் அரிசி பயன்படுத்தி வந்ததும், பிளாக்கில் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்ததையும் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் ஒருசம்பவம் தூத்துக்குடியில் நடந்திருக்கிறது. 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மாவை அதிகாரிகள் ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட அரிசியை கண்டுபிடித்தபிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேசும்போது, ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரேஷன் அரிசி கடத்தல்கார்களுக்கு ரேஷன் அரிசி விற்பனை செய்பவர்கள் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


மேலும் படிக்க | ரேஷன் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு! இனி மக்களுக்கு இந்த தொல்லை இல்லை!


ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு ரேஷன் அரிசி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உங்களின் ரேஷன் கார்டு ரத்து ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. உணவுப்பொருள் வழங்கல் துறை இதுதொடர்பான புகார்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் சிக்கும்போது, அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் உங்களைப் பற்றி தகவல் தெரிந்தால், உங்களின் குடும்ப அட்டை அரசு பறிமுதல் செய்யலாம் அல்லது அரிசி விநியோகத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1900 கோடி ரூபாய் மதிப்பிலான 5.2 லட்சம் டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அரசு 42,500 டன் மட்டுமே கடத்தல் அரிசியை பறிமுதல் செய்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது என குற்றம்சாட்டினார். தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதால், இனி வரும் நாட்களில் ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கை தீவிரமாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இப்போதெல்லாம் புதிய ரேஷன் கார்டு வாங்குவது மிகவும் கடினம். புதிய ரேஷன் கார்டு விநியோகம் தீவிர கள ஆய்வுக்குப் பிறகே விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், உடனே மகளிர் உரிமைத்தொகைக்கு மக்கள் விண்ணப்பிப்பதால் ரேஷன் கார்டு கொடுப்பதை அரசு மிக மெதுவாகவே செய்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் ரேஷன் அரிசி விற்பனையில் சிக்கினால் புதிய ரேஷன் கார்டு பெறவே முடியாது. அப்படியே வாங்கினாலும் பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு : இப்போது விண்ணப்பித்தால் எப்போது கிடைக்கும்? முக்கிய தகவல்


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ