மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த செய்தி ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அடிப்படை உணவுப் பொருட்களைத் தவிர, ரேஷன் கடைகளில் உப்பு, டீத்தூள், சாம்பார் தூள், சோப்பு, மசாலா பொருட்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த மளிகைப் பொருட்களை மக்கள் கண்டிப்பாக வாங்க வேண்டியதில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் இதனை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்றும் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் ரேஷன் கடைகளுக்கு அதிகப்படியான மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான மக்களும் அவற்றை வாங்க விரும்புவதில்லை. தீபாவளிக்கு முன், சிறப்பு மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டன, சில கடைகளில் அவை விற்று தீர்ந்தன. ஆனால் சில கடைகளில் அவை விற்பனையாகவில்லை. விற்பனை ஆகாத பொருட்களை கிடங்கிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்கள் இந்த மளிகை பொருட்களை மக்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில நேரங்களில் மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர் இது சமூக வலைத்தளங்களில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
ரேஷன் கடை ஊழியர்கள் தான் மளிகை பொருட்களுக்கான மொத்த தொகையையும் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் விற்பனை ஆகாத பொருட்களுக்கு சொந்த பணத்தை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் கடைகளுக்கு குறைவான மளிகை பொருட்களை அனுப்புமாறு அரசிடம் ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு உண்மையிலேயே மளிகைப் பொருள்கள் வேண்டுமானால் அவர்கள் பணம் கொடுத்து வாங்கி கொள்வார்கள், எனவே கட்டாயப்படுத்தி மளிகை பொருட்களை விற்க வேண்டாம் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியிருக்கிறது.
ரேஷன் கார்டு உள்ளவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் மளிகைப் பொருட்களை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம் என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறப்பு தீபாவளி பேக்கேஜ்களில் இருந்து விற்பனை ஆகாத மளிகைப் பொருட்களைத் திருப்பி அனுப்ப சொல்லி உள்ளோம். ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், மளிகைப் பொருட்களை மக்கள் வாங்காமல் இருப்பதற்காக யாரையும் அவமானப்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே தொழிலாளர்கள் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது? இப்படி தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ