Tamil Nadu Shocker: விருதுநகர் பட்டாசு பிரிவில் பயங்கர தீ விபத்து, இருவர் பலி
விருதுநகரின் சாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத பட்டாசு உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருவர் உயிர் இழந்தனர்.
விருதுநகர்: விருதுநகரின் சாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத பட்டாசு உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருவர் உயிர் இழந்தனர். இறந்த இருவரும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு வெடிப்பால் அருகிலுள்ள பல வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சம்பவத்தின் போது எடுக்கபட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.
சம்பவ இடத்திலேயே இறந்த இரண்டு நபர்களைத் தவிர, மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டனர். சேதத்தை மதிப்பிடுவதற்கும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கும் நான்கு தீயணைப்பு வண்டிகள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்தன.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை (TN Police) மற்றும் மாவட்ட அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த குண்டுவெடிப்பும், அருகிலுள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்ததும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ: Tamil Nadu Assembly Update: சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிப்பு
என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல உள்ளூர்வாசிகள் அந்த இடத்திற்கு வந்ததில் அங்கு சில நேரம் மக்கள் கூட்டம் அதிகமானது. பின்னர் அதிகாரிகள் மக்களை விலக்கினர்.
தமிழக அரசின் (Tamil Nadu Government) சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, தீப்பெட்டி உற்பத்தித் தொழில்கள் மட்டும் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆர்டர்கள் மற்றும் ஏற்கனவே சரக்குகளை அனுப்புவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதிப்பாடுகளை கொண்டுள்ள ஏற்றுமதி அலகுகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்களில், பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து எந்த தனிப்பட்ட அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பட்டாசு அலகுகளில் ஏற்படும் விபத்துக்கள் ஒரு தீராத வலியாய் உருவெடுத்து வருகின்றன. இந்த விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளால் பல குடும்பங்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
சட்டவிரோத முறையில் நடக்கும் பட்டாசு உற்பத்தியில் தொடர்ந்து இப்படிப்பட்ட விபத்துகள் (Fire Accident) ஏற்பட்டு வருகின்றன. முறையான உரிமம் பெற்று நடத்தப்படாததால், இந்த இடங்களில் ஒழுங்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபடுவதில்லை. அரசு பலமுறை கண்டுத்தும், இப்படிப்பட்ட சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது வேதனையான உண்மையாகும்.
ALSO READ: TN Schools: அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR