ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை செனைனயில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். மேயர் உள்ளிட்ட 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | UP election: கருத்து கணிப்பா? அல்லது திணிப்பா - உ.பியில் எழும் கலக்குரல்


21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அதாவது 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை .நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் 28 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுகள் மீதான பரிசீலனை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப ப்பெறுவதற்கான கடை நாளாகும். வெற்றி பெற்றவர்கள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி பதவியேற்பார்கள் என அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், மறைமுக தேர்தல் 04.03.2022 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.


ALSO READ | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது - உயர்நீதிமன்றம்!


நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் அட்டவணை


வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28


வேட்புமனு தாக்கல் கடைசி நாள் : பிப்ரவரி 04


வேட்பு மனு பரிசீலனை : பிப்ரவரி 05


வேட்புமனு வாபஸ் பெறும் நாள் : பிப்ரவரி 07


வாக்குப்பதிவு : பிப்ரவரி 19


வாக்கு எண்ணிக்கை : பிப்ரவரி 22


மறைமுக தேர்தல்: மார்ச் 4


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR