சென்னை: டாஸ்மாக் (Tasmac) ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தவுள்ளதாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.திருட்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபானங்களை விற்பனை செய்யும் மொத்த உரிமம் பெற்ற நிறுவனமாகும்.


சில்லரை டாஸ்மாக் (Tasmac) கடைகளில் பணிபுரிவதற்கு மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவியாளர், மதுக்கூட மேற்பார்வையாளர் என்று நான்கு பணிக்கு தேர்வு செய்தவர்களிடம் முறையே ரூ.50,000, ரூ.15,000, ரூ.1000 காப்புத் தொகை பெறப்பட்டு மாநிலம் முழுவதுமே 7,300 மதுபான சில்லரை விற்பனை கடைகளில் 36,000 ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


16 மணி நேரம் மது விற்பனையும் நடைபெற்றது. அதன் அடிப்படையில் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.3,000, ரூ.2,000, ரூ 1,500 ஆகும். பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு கொத்தடிமைத் தனத்தை அரசு தனது நிறுவனமான டாஸ்மாக்கில் அரங்கேற்றியுள்ளது.


ALSO READ | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை


டாஸ்மாக்கில் ஊழல் முறைகேடுகளை (Tasmac corruption scandal) தடுக்க வேண்டும். நிறுவனத்திற்கான நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பணியிட மாறுதல் மற்றும் கொள்முதலில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை அரசு தடுக்க வேண்டும். தனிநபர், அரசியல்வாதிகளின் தலையீடுகள், அதிகாரிகளின் அத்துமீறல்களை தமிழக முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.


கடை ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் சமூக விரோதிகளையும் அரசு கைது செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் பணியாற்றக் கூடிய அனைத்து ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் உரிய பாதுகாப்பினை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக முதலமைச்சர் (Tamil Nadu Chief Minister) நிறைவேற்றிட வேண்டும். அப்பொழுதுதான் டாஸ்மாக்கில் பணியாற்றக்கூடிய 26 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தியது போலிருக்கும்.


இதன் காரணமாக செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்த உள்ளோம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்கள்.


ALSO READ | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR