Tasmac stores reopen: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் (Tamil Nadu State Marketing Corporation Limited) அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் செயல்படும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை (Chennai) பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் டாஸ்மாக் (Tasmac) கடைகள் திறக்கும் தமிழக அரசின் செயலுக்கு பல காட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.


ALSO READ |  குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 18 முதல் 10 - 7 மதுக்கடைகள் இயங்கும்!!


சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி. யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல் என திமுக (DMK) தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (Amma Makkal Munnetra Kazhagam) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (T. T. V. Dhinakaran) , "கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவு மனசாட்சி இல்லாத செயலாகும். ஆபத்து நிறைந்த முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.


ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த நாட்களில் மதுக்கடைகள் திறக்கப்படாது!!


கொரோனாவை அதிகரிக்கவும் போட்டி போட வைக்கத்தான் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பா? என திமுக எம்.பி. கனிமொழி (Kanimozhi Karunanidhi) கேள்வி எழுப்பியுள்ளார்.