நாடு மழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் அது மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் முற்றிலுமாக தற்காப்பு கவசமாக இருந்த முகக்கவசங்களை முற்றிலுமாக கைவிடத்தொடங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் இல்லை என்றால் 500 ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பும் வெளியானது. 


மேலும் படிக்க | பிரச்சனையே உங்களாலதான் வந்துச்சு : ஓபிஎஸ் ஓப்பன் டாக்..!


இது குறித்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வம், முகக்கவசம் அணியாமல் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை சுட்டிக்காட்டி பேசும் விதமாக முககவசம் கட்டாயம் என்பது பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாதா என கேள்வி எழுப்பினார்.


அப்போது குறுக்கிட்டு பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் மாஸ்க் அணிந்துகொண்டு  பேசினால் சத்தம் குறைவாக வருகிறது எனவும் பேசி முடித்த பிறகு மாஸ்க் அணிந்துகொள்ளலாம் எனவும் கூறினார். மேலும், சட்டத்தை மதிக்கக்கூடாது என்பது நோக்கம் அல்ல என குறிப்பிட்ட சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளில் மாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவை கட்டாயம் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் கொரோனா 3ஆம் அலையின் போதே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார் என கூரினார்.மேலும், அதை முறையாக பின்பற்றியதன் காரணத்தால்தான் கொரோனா 3ஆம் அலையை எளிதாக கடந்து வர முடிந்தது என குறிப்பிட்ட அமைச்சர், அந்த விதிமுறைகள் தற்போது வரை விலக்கிக் கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய மா.சுப்பிரமணியன், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும் இதனால் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயம் எனவும் குறிப்பிட்டார். 


இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே முகக்கவசத்துடன் காணப்பட்டார். பேசும் நேரத்தில் மட்டும் முகக்கவசத்தை மாற்றி வைத்து விட்டு பேசிய பிறகு மீண்டும் முகக்கவத்தை அணிந்துகொண்டார். இதன் மூலம் முகக்கவசம் என்பது மக்களுக்கு மட்டும் அல்ல முதலமைச்சர் வரை அனைவருக்கும் பொருந்தும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.கொரோனா தொற்றுக்கு மனித உடல் என்பது மட்டும்தான் தெரியுமே தவிற பணமோ அல்லது பதவியோ தெரியாது என்ற எதார்த்தமான உண்மை அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா தொற்றின் 4-ஆம் அலை வேண்டாம் என்றால் மாஸ்க் வேண்டும் என்பதே அரசு மக்களுக்கு வழங்கும் அறிவுறுத்தலாக உள்ளது. 


மேலும் படிக்க | ஆளுநர் உரைகள்..சர்ச்சைகள்...திமுக பதிலடிகள்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR