தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை (Corona Second wave) கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் ஏதும் இல்லாத முழு ஊரடங்கு (Lockdown) அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, ஒரு நாளில் 35,000 என்ற அளவில் பதிவான கொரோனா தொற்று (Corona virus) பாதிப்புகள், தற்போது  குறைந்து வருகிறது. நேற்று, தமிழகத்தில்  புதிதாக, 22,651 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,95,402 என்ற அளவை எட்டியுள்ளது. அதே போன்று, கொரோனா தொற்று காரணமாக, நேற்று 463 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,128  என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வந்தாலும், தொற்று பாதிப்பு  இன்னும் ஆயிரக்கணக்கில் இருப்பதால், முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படலாம்  என கூறப்படுகிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அற்விப்பை வெளியிடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்றும், தொற்று பாதிப்பு குறையாத இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடும்  எனவும் கூறப்படுகிறது.


நேற்றைய தொற்று பாதிப்பில், அதிகபட்சமாக, கோவையில் 2,810 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சென்னையில் 1,971 பேருக்கும்,  ஈரோட்டில் 1,619 பேருக்கும், சேலத்தில் 1,187 பேருக்கும், திருப்பூரில் 1,161 பேருக்கும் புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.


ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR