Thiruvannamalai News | திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசித்து வரும் உறவு முறையில் தாத்தாவான முதியவர் நாகராஜ்(62) என்பவர் கடந்த 21.10.2023 தேதி அன்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன்பின் அந்த சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. அதன் காரணமாக அந்த சிறுமி இரண்டு மாதம் கர்ப்பம் ஆனதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புகாரின் பேரில் செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் ஜீவராஜ்மணிகண்டன், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராணி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவர் நாகராஜ்(62) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவர் நாகராஜ் குற்றவாளி என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ வழக்கு உறுதி செய்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க | அமரன் திரையரங்கில் குண்டு வீசியது யார்? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!


இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 11 ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கும்போது பெரும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. காரணம், சிறுமி கர்ப்பமடைந்ததற்கு அவருடைய சித்தி மகன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


அண்மைக்காலமாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராமங்களிலும் விழிப்புணர்வு நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்பவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனைகள் கிடைக்கும். ஒருவர் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் செய்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அருகில் உள்ள காவல்நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு. குழந்தைகளை ஆபாச படம் எடுத்தால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் அபராதமும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்பவர்களுக்கு 7வருட சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கூட விதிக்கப்படும். 


மேலும் படிக்க | சென்னையில் இன்று, நாளை ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ