மழை வெள்ளத்தில் பிளாஸ்டிக் பேரல்களை மிதவையாக மாற்றி மனைவியை கொண்டு சென்ற கணவன் உதவிய தன்னார்வலர்கள் கண்டுகொள்ளாமல் சென்ற திமுக அமைச்சர்கள் உதவிய பாஜக தலைவர் அண்ணாமலை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடியாத நிலை தொடர்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது 


இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம் சோனகன் விளை பகுதியைச் சேர்ந்த பார்வதி முத்து என்பவரின் மனைவி முருகேஸ்வரி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் சிகிச்சை இன்னும் முடிவடையாத நேரத்தில் மருத்துவர்களிடம் பார்வதி முத்து சிகிச்சை முடிய எத்தனை நாட்கள் ஆகும் என கேட்டுள்ளார் அதற்கு மருத்துவர்கள் இன்னும் 15 நாட்கள் ஆகும் ஆஸ்பத்திரியில் இருந்தால் இருங்கள் இல்லையென்றால் ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்


இதைத்தொடர்ந்து பார்வதி முத்து மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேசை அணுகி தனது மனைவியை சொந்த ஊர் கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் இல்லையென்றால் ஏதாவது ஆம்புலன்ஸ் வாகனம் உதவி  ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகன உதவி செய்ய மறுத்துள்ளது


மேலும் படிக்க | திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இலவச பேருந்து சேவை


இதைத்தொடர்ந்து களத்தில் இறங்கிய பார்வதி முத்து தனது மனைவியை வெள்ளத்தில் கொண்டு செல்வதற்காக இரண்டு பிளாஸ்டிக் ட்ரம் பேரல்களில் மிதவை போன்று அமைத்து அதை தனது மனைவியை படுக்க வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளார் அப்போது அங்கே வந்த தன்னார்வலர்கள் பார்வதி முத்துக்கு உதவி செய்து மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்துள்ள மழை நீரில் முருகேஸ்வரியை பத்திரமாக மிதவையில் கொண்டு சென்றுள்ளனர் அப்போது வெளியே 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நின்றுள்ள நிலையிலும் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் வழங்க மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது


மேலும் அந்த வழியாக சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இந்த சம்பவங்களை பார்த்தபடி கீழே இறங்கி  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றனர்


இதைத்தொடர்ந்து அந்தப் பகுதி வழியாக சென்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி அந்த வழியாக சென்ற ஒரு யானை வாகனத்தை வாடகைக்கு பிடித்து சானது கட்சி தொண்டர் ஒருவர் மூலம் பத்திரமாக சொந்த ஊர் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி சென்றார் 


பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண் முருகேஸ்வரியை வாகனத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் படிக்க | நத்தம்: பெண் கொலையில் சிக்கிய ரகசிய காதலன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ