தூத்துக்குடி மாவட்டம், வண்ணார் தெருவை சேர்ந்தவர்கள் மாடசாமி - முனியலட்சுமி தம்பதி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முனியலட்சுமி சில ஆண்டுகளாக 17 வயதாகும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் முனியலட்சுமி வீட்டில் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த முனியலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


முனியலட்சுமியின் உடலில் கழுத்தை நெரித்தது மற்றும் கத்தியால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்ததால் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போதுதான் கொலைக்கான காரணத்தை அறிந்து அதிர்ந்துபோனார்கள் காவல்துறையினர். 


மேலும் படிக்க | கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை எரித்து கொன்ற மகள்..!



விசாரணையில் தாய் முனியலட்சுமியை 17 வயதே ஆன மகள், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மகளுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததால் இதனை தாய் முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 


இதனால் ஆத்திரமடைந்த மகள் ஆண் நண்பர்கள் மூன்று பேர் உதவியுடன் நேற்று நள்ளிரவு தாய் முனியலட்சுமியின் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக மகளை கைது செய்த போலீஸார் கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணன் மற்றும் தங்கம் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண் நண்பர்களுடனான பழக்கத்தை கண்டித்த தாயை பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | DMK பிரமுகரை ஆள் வைத்து கொன்ற மகள் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR