தமிழகம், புதுச்ரேி மற்றும் கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. பல அரசியல் கட்சித் தலைவர்கள் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் சட்ட பேரவைத் (Assembly Elections) தொகுதியில், அதிக பட்சமாக 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக 59 பேர் போட்டியிடுகின்றனர். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanisamy) போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


ALSO READ: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்


தேர்தல் நடக்க சுமார் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமுக (AIADMK), திமுக (DMK) தவிர, இந்த தேர்தலில், பாஜகவும் (BJP) முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், இந்த தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளை கொண்ட வித்தியாசமான தேர்தலாக உள்ளது என்றால் மிகையில்லை. 


இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான பரிசீலனையை முடித்த தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.


அந்த வகையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் (Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வேட்புமனுவை சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்திருந்தார். 


இந்த நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ALSO READ: மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR