Tamil Nadu Latest News: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 92 நாட்களாக 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பின் கீழ் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 195 தொகுகளில் இதுவரை 'என் மண் என் மக்கள்' யாத்திரை முடிவுற்று, 196ஆவது தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் 'என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தை அண்ணாமலை நேற்று (பிப். 10) மேற்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு ஏற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்தல் மற்றும் நலம் விசாரித்தல் என பல்வேறு நிகழ்வுகள் இந்த நடைப்பயணத்தில் நடைபெற்றது. 


கல்வெட்டை பார்வையிட்ட அண்ணாமலை


இதனைத்தொடர்ந்து உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, மன்னர் ஆட்சி காலங்களில் நடைபெற்ற தேர்தல் முறைகளில் குறித்த கல்வெட்டு உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வைகுந்த பெருமாள் திருக்கோயிலை அண்ணாமலை பார்வையிட்டார்.


மேலும் படிக்க | தாமரை சின்னத்தில் போட்டி, மாநிலங்களவை சீட் கொடுக்க முடியாது - தேமுதிகவுக்கு பாஜக செக்


மேலும், அங்கிருந்த கல்வெட்டுகளில் உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகிகள் கல்வெட்டுகளில் உள்ள தேர்தல் விதிமுறைகள் குறித்தும், வரலாற்று செய்திகளையும் விளக்கி தெரிவித்தப்பின் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.



சென்னைவாசிகள் கவனத்திற்கு...


இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தபோது , "சிறிய வளர்ச்சி பெற்ற கிராமமாக உள்ள உத்திரமேரூரில் பல்வேறு சிறப்புகள் அடங்கி உள்ளது. விவசாயம், தேர்தல் விதிமுறைகள் என பல உலகிற்கு எடுத்துக் கூறும் வகையில் உத்திரமேரூர் உள்ளது.


குறிப்பாக தேர்தல் விதிமுறைகளில் ஒருவர் 365 நாட்களுக்கு மட்டுமே உறுப்பினராக செயல்பட முடியும். அவரை சார்ந்த நிர்வாகிகள் உறவினர்கள் யாரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


இதில் உள்ள கருத்துக்களை தேவையானதை எடுத்துக் கொண்டால் இந்த வரலாற்றுக்கு சிறப்பு சேர்க்கும். மேலும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சென்னைவாசிகள் உத்திரமேரூரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.


அமைச்சர் மீது அண்ணாமலை கடும்


 அதனையடுத்து பாஜக விளம்பர பலகைகளில் உள்ள நபர்கள் குற்றவாளிகளாக உள்ளவர்கள்தான், மேலும் அவர்கள் அண்ணாமலையுடன் உள்ளதாக அமைச்சர் செஞ்சிமஸ்தான் குற்றம் சாட்டி வருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது வியப்பாக உள்ளது. இங்கு உள்ள கல்வெட்டுகளில் உள்ள தேர்தல் விதிமுறைகளை நேரில் அவர் வந்து பார்த்தாலே போதும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பதா என்பது அவருக்கே புரியும்.


அவரை சார்ந்தவர்களுக்கு புரியும். கல்வெட்டில் உள்ள தேர்தல் விதிமுறைகளை நேரடியாக படித்து தெரிந்து கொண்டால் அவர் அமைச்சராகவே இருக்க மாட்டார். மேலும் உத்திரமேரிலுள்ள புகழ்பெற்ற கல்வெட்டுகள் உள்ளதால் இதை சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்த வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார். 


அண்ணாமலையின் இந்த நடைப்பயணத்தில் பாஜக தேசிய சிறுப்பான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு , மண்டல பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்ட உத்திரமேரூர் ஒன்றிய, நகர, பேரூர் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


மேலும் படிக்க | 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி - பாஜக அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ