டெல்டா விவசாயிகள் நலனுக்காக ரூ. 61.09 கோடி மதிப்பில் திட்டம் -முதலமைச்சர் அறிவிப்பு
ரூ. 61.09 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டமானது `தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ. 61.09 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். இந்தத் திட்டத்தால் சுமார் 2.07 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மேட்டூர் அணை திறப்பு மற்றும் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் மூலம் குறுவை நெல் சாகுபடி இலக்கைவிட கூடுதலான சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டமானது "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும்" திட்டம் செயல்படுத்தப்படும்.
குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
ALSO READ | முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஒரு மாத கால ஆட்சி எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR