சென்னை: கொரோனா காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முக்கிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (Ration Card Holders) இரண்டாயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி (Corona Relief Fund) வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த டோக்கன் வரும் 12 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண டோக்கனை பெற்றுக்கொண்டவர்கள் வரும் 15 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். இந்த டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
ALSO READ | கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்படும். மக்கள் அதிகமாக கூட்டம் சேர வேண்டாம். ரேஷன் கடைகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, முதல்கட்ட கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்'#TNLockdown #MKStalin#COVID19 pic.twitter.com/UxVXxHheCt
— DMK (@arivalayam) May 10, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR