COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) உச்சத்தில் இருந்த போது, தமிழக அரசு முழு ஊரடங்கை விதித்தது. பின்னர், தொற்று பாதிப்புகள் குறைய குறைய  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.


தமிழ்நாட்டில் (Tamil Nadu) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் திங்களட்கிழமை (ஜூலை 18 ஆம் தேதி) காலை நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று (Corona Virus) குறைந்து வருகிறது என்றாலும் கோவை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் (WHO) எச்சரித்துள்ள நிலையில்,  கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியகர்களுடன், தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி ஆலோசனை நடத்துகிறார். 


ALSO READ | பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்


கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தொற்று பரவல் அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட பல விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். மேலும், இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.


ALSO READ | Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR