Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம்

 தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பொது மக்கள் புகார் அளிக்க, புதிதாக, முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 9, 2021, 12:55 PM IST
  • சட்டமன்றத் தெர்தலில் திமுக-வின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார உத்தி அனைவரையும் ஈர்த்தது.
  • திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
  • முதல்வர் ஸ்டாலினிடம் பொது மக்கள் புகார் அளிக்க, புதிதாக, முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம் title=

சென்னை: இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் பல வித புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன. பல புதிய கட்சிகள், இணைய வழி பிரச்சாரம், ஹை டெக் பிரச்சாரம் என பிரச்சாரம் களைகட்டியது. திமுக-வின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார உத்தி அனைவரையும் ஈர்த்தது. 

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரசாரத்தின்போது, பொது மக்களிடமிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகார்களைப் பெற்றார். ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களுக்குள் பெறப்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்படும் என ஸ்டாலின் கூறினார். அதற்கென தனி துறை துவக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் (MK Stalin) முதல்வராக பதவியேற்றவுடன், தேர்தல் வாக்கினிற்கேற்ப 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ். அந்த துறைக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரச்சாரத்தில் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இதில் அடுத்த பெரிய நடவடிக்கையாக, முதல்வர் ஸ்டாலினிடம் பொது மக்கள் புகார் அளிக்க, புதிதாக, முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Tamil in CoWIN portal: கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்ப்பு

Pஎன்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தமிழக (Tamil Nadu) முதல்வரிடம் நேரடியாக புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் இந்த இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் புகார்களை அளிக்க துவக்கப்பட்டுள்ள இந்த வலைத்தளம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் அலை தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்றது. பொறுப்பேற்ற நாள் முதலே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா சிகிச்சை முறைகள் (Coronavirus Treatment) துரிதப்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என அனைத்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழக அரசு அனத்து தட்டுப்பாடுகளையும் படிப்படியாக சரி செய்து கொண்டு இருக்கிறது.

ALSO READ: TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News