தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.  பழனிச்சாமி மாநிலத்தில் உள்ள கொரோனா தொற்று நிலை  தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்தினார் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை (ஜூலை 10) : தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிச்சாமி மத்திய அரசின் குழுவுடன், மாநிலத்தில் நிலவும் COVID-19 பெருந்தொற்று குறித்து மத்திய குழுவுடன் மறு ஆய்வு செய்தார். மத்திய அரசின் குழுவிற்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமை தாங்கினார். மாநிலத்தில் COVID-19 நிலைமை குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டது.


ALSO READ | மாரியம்மனாக மாறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பெண்.



கொரோனா பெருந்தொற்று பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. அது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டன. தமிழக  தலைமைச் செயலர் கே.சண்முகம் மாநில சுகாதார நலத்துறை அமைச்சர் திரு. சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்தியகுழு ஆலோசனை நடத்தியது.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ALSO READ | அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார்!


தமிழகத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 161 ஆகும். மாநிலத்தில், கொரோனா தொற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆகும்.