அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று பேட்டியளித்த அவர் இதுபற்றி கூறுகையில், அமைச்சர் OS மணியன் இதுபற்றி கூறியது, தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதற்குள் போக நான் விரும்பவில்லை. கட்சியினுடைய கருத்து ஏற்கனவே எடுத்த முடிவு மட்டும் தான். நேற்று இன்று நாளை, எப்போதும் ஒரே முடிவுதான். ஒரே ஒரு குடும்பம் மற்றும் சசிகலா ஆகியோர் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதுதான் ஒரே முடிவு. அதில் எந்த மாற்றமும் கிடையாது" என அவர் கூறினார்.
READ | நீலகிரியில் ₹.447.32 கோடியில் அரசு மருத்துக் கல்லூரி; அடிக்கல் நாட்டினார் EPS!
முன்னதாக அமைச்சர் OS.மணியன் அளித்த பேட்டியில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு என்ன நடக்கும் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த பேட்டியில், நான் சாதாரண மாவட்ட செயலாளர். இதில் முடிவெடுக்க வேண்டியது கட்சித்தலைமை. தலைமையை கேள்வி கேட்பது தான் சரியாக இருக்கும். இவ்வாறு மணியன் தெரிவித்தார்