சென்னை: தமிழ்நாட்டில் (Tamil-Nadu) மாரியம்மன் (Goddess Mariamman) போல் வேடமணிந்த ஒரு பெண் (Woman) தெருக்களில் முகக்கவசங்களை (Masks) விநியோகித்து வருகிறார். மேலும் அவர் கோரோனா (Corona) குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பெண் பின்பற்றிவரும் இந்த புதுமையான வழி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. மக்கள் கொரோனாவுக்கு அஞ்சி வீடுகளில் அடைந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தப் பெண் தன்னலம் கருதாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபடிருப்பது பாராட்டத்தக்க விஷயமாகும்.
தமிழக மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக மாரியம்மனிடம் வேண்டிக்கொள்வது வழக்கமாகும். மக்களுக்கு இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்த, 'காக்கும் அம்மன்' என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர். கிராமப்புற கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் சுமார் 30 சதவீதம் பேர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில்லை என்று மாநில சுகாதார அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ALSO READ: தலைநகரை கலக்கும் கபசுர குடிநீர்: சித்த மருத்துவத்துக்கு அதிகரிக்கும் மவுசு
கொரோனா வைரஸ், மார்ச் மாதம் முதல் நம் நாட்டில் காட்டுத்தீ போல பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் லாக்டௌன் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, காவல்துறையினரும் சமூக சேவகர்களும், மருத்துவ ஊழியர்களும், பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்தத் தொற்று எளிதில் பரவக்கூடியது என்றும் அதைத் தடுக்க மக்கள் அவரவர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். கோவிட் -19 க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். பல்வேறு வேடமிட்டு மக்களை எச்சரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். டெல்லி, பீகார், ஆந்திரா என பல இடங்களில் பலர் யமதர்மராஜரின் வேடமிட்டு மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நாம் கண்டோம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 3,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1,22,350 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் மீட்பு விகிதம் 60 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
Delhi Police, with the help of a local artist dressed as Yamraj, created awareness among the people and appealed to them to remain indoor during lockdown. Announcement was made by them for the people in RK Puram area, in a bid to create awareness. #COVID19 pic.twitter.com/7aJ3UC3ut7
— ANI (@ANI) April 27, 2020
ஜூலை 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் வணிகங்களும் ஷாப்பிங் மையங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மதுரையில் லாக்டௌன் தொடர்கிறது.
ஜூலை 15 வரை மாநிலம் முழுவதும் பஸ் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்களும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல இடங்கள் திறப்பட்டு வரும் நிலையில் தற்போது மக்கள் மேலும் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
ALSO READ: காற்றின் மூலம் பரவும் கொரோனா... தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி..