மாற்றுதிறனாளிக்கு நேரில் உதவிய முதல்வர்! நெகிழ்ச்சியில் தொண்டர்கள்
மாற்றுதிறனாளிக்கு செயற்கை கைகளை முதல்வரே மாட்டிவிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே நடைபெற்ற அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்புத்தூர் அடுத்து காரையூர் சோளம்பட்டி விலக்கில் நடைபெற்ற அரசு விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 59,162 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 24.77 கோடி செலவில் முடிக்கப்பட்ட 44 திட்டப்பணிகளை திறந்து வைத்து 119.68 கோடி மதிப்பீட்டிலான 127 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
இந்நிகழ்வின்போது மாற்றுதிறனாளி ஒருவருக்கு மேடையிலேயே இரண்டு செயற்கை கைகளை முதல்வரே மாட்டிவிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மற்றம் ஊரக உள்ளாட்சித்துறை முதன்மைச்செயலர் அமுதா உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் படிக்க | கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு : மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe