முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவை போலவே,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாநகராட்சி ஆணையரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு (Sellur Raju) சந்தித்தார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார். 


மனு அளித்த பின்னர் செல்லூர் ராஜு மாநகராட்சி வளாகத்தில் பேட்டி அளித்தார். இதி அவர் கூறியதாவது:


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது. அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை தண்ணீர் குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ALSO READ: இறைவன் சொத்து இறைவனுக்கே: இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்



ஏற்கனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்து விட்டார்கள். அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (J Jayalalitha) ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது.


இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 


ALSO READ: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR