இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
தொடக்கத்தில் இருந்தே இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் கடும் எதிா்ப்பு வலுத்து வந்தது. இதைத் தொடா்ந்து நீட் தோ்வால் (NEET Exam) தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்ககப்பட்டு நீட் தோ்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து.
ALSO READ | தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்
இந்தச் சூழலில் தமிழகத்தில் இந்தாண்டு நீட் தோ்வு நடைபெறுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் 2021-22-ஆம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13ம் தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைந்ததுடன் இந்த தேர்வு கடந்த செப்டம்பா் 12ம் நடந்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் எனப்படும் இளநிலை மருத்துவ கல்வி நுழைவு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடுமாறும்! மேலும், இவ்வழக்கு முடியும் வரை நடைபெற்று முடிந்த இளநிலை மருத்துவ நுழைவு தேர்வு ( நீட் ) தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிடுமாறும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி நடக்கும் தேர்வுகளில் நியாமான முறையில், எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க நீட் தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் சோதனை, ஜாமர் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் பொருத்தவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR