TN Election Results: ஆச்சர்யங்களை அள்ளி தந்துள்ள தமிழக தேர்தல்
தமிழக தேர்தல் முன்னணி நிலவரங்கள், தெளிவாக திமுக வெற்றி நடை போட்டுவதை காட்டுகின்றன. கருத்து கணிப்புகள் கூறிய படியே திமுக வெற்றி பெற்று, அதன் தலைவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இருக்கிறார்.
தமிழக தேர்தல் முன்னணி நிலவரங்கள், தெளிவாக திமுக வெற்றி நடை போட்டுவதை காட்டுகின்றன. கருத்து கணிப்புகள் கூறிய படியே திமுக வெற்றி பெற்று, அதன் தலைவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இருக்கிறார்.
கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன், இந்த முறை களத்தில் காணாமல் போய் விட்டார் எனலாம்., தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அமமுக தலைவர் தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியிலேயே, அவர் பின்னடைந்துள்ளார். அங்கு அவரை எதிர்த்து போட்டிட்ட அதிமுகவின் கடம்பூர் ராஜு அவர்கள் தற்போது முன்னிலையில் உள்ளார்.
ALSO READ | Election 2021: அசாமில் ஆளும் கட்சியே சிம்மாசனத்தை கைப்பற்றுகிறது CM Sonowal
நோட்டாவை தாண்டாத கட்சி என கூறப்பட்ட பாஜக, இந்த முறை சட்டமன்றத்தில், நிச்சயம் நுழைந்து விடும் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக தான் போட்டியிட்ட 20 தொகுதிகளில் ஐந்து இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் துறைமுகம் தொகுதியில், பாஜக சார்ப்பில் போட்டியிட்ட வினோஜ் செல்வம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். துறைமுகம், தாராபுரம், நெல்லை, ஊட்டி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இதை தவிர, நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனியாக களம் கண்ட நாம் தமிழர் கட்சி, 3.9% வாக்குகளை பெற்றது. அக்கட்சி இந்த முறையும் தனியாக களம் கண்டதோடு, பாதி தொகுதியில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. அக்கட்சி இந்த தேர்தலில், 8% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இது நாம் தமிழர் கட்சி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதையே காட்டுகிறது.
ALSO READ | மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- மீண்டும் ஆட்சியை தக்கவைக்கிறார் மம்தா பானர்ஜி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR