தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்க ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 54 மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என ராமேஸ்வரம் மீனவர் சங்கம்  எச்சரிக்கை செய்துள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு (Tamilnadu) மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 54 மீனவர்களையும், அவரக்ளது 5 மீன்பிடி  படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசு தலையிட்டு உடனடியாக விடுவிக்காவிட்டால், தேர்தலை புறக்கணிப்போம் என்றும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 54 மீனவர்களையும், அவரக்ளது 5 மீன்பிடி  படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரியும் மீனவர் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று ராமேஸ்வரம் மீனவர் சங்கச் செயலாளர் ஜேசுராஜ் கூறினார். 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில், அதிமுக -பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-திமுக கூட்டணி நேரிடையாக களத்தில் உள்ளனர்.


தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில், பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. திமுக தலையிலான கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மறுமலர்ச்சி திமுக,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை  உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 


ALSO READ |  அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR