சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாளை மாலை 4 மணிக்கு டெல்லி நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் கொரோனா நிலவரம், 7 பேர் விடுதலை, நீட் மற்றும் மேகதாது அணை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை (PM Narendra Modi) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜூன் 21 ஆம் தேதி முடிந்து முதல் முறையாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது. அந்த கூட்டத்தின் முதல் நாளில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (TN Governor Banwarilal Purohit) உரையாற்றினார். அப்போது சில முக்கிய அம்சங்கள் குறித்து பேசியிருந்தார். 


ALSO READ | TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை


அதாவது வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான மத்திய அரசை உருவாக்கிட முடியும். தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை, அதன் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும். இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். 


இந்த அம்சங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


அதேபோல ஜூன் 17 ஆம் தேதி முதல்வரானவுடன் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் (M K Stalin) பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். நீட் தேர்வுகள் குறித்தும் முதல்வர் பிரதமருடன் விரிவாக பேசியதாகக் கூறப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தமிழத்தின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் மனுவாக வழங்கினார். இதுக்குறித்தும் ஆலோசிக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ | பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR