திருவண்ணாமலை நகரில் உள்ள திண்டிவனம் சாலையில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது, இதில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் விடிய விடிய திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையமான ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொறுத்தவரை திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 1722 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு தற்பொழுது மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா ஆகியோர் வாக்குப்பதிவு இந்திரங்களை பார்வையிட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா? - முழு விவரம் உள்ளே!


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன்....


வாக்கு எண்ணிக்கை மையங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், தமிழ்நாடு அதிரடிப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு காவலர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, அதே போன்று வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கு திசைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மற்றும் பாதுகாப்பு அறை உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இதனை வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் ஏஜெண்டுகள் 24 மணி நேரமும் கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜூன் 4 ஆம் தேதி வரை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வாக்கு எண்ணும் மையம் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறினார்.


இதேபோன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இதில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு தனித்தனி அறையில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி பொது பார்வையாளர் முன்னிலையில் தனித்தனி அறையில் சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உண்டான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் அனைத்துக் கட்சி பிரமுகர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தேர்தல் விதிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுத்த தேர்தல் ஆணையம் - சத்யபிரதா சாகு கொடுத்த அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ