Weather Update: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு-IMD
இலங்கை கடற்கரையில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 12 வரை சென்னையில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் அதிக மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: இலங்கை கடற்கரையில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 12 வரை சென்னையில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் அதிக மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும்.
"தமிழ்நாட்டின் (Tamil Nadu) பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுத்துரை நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று சென்னை பிராந்திய வானிலை ஆய்வு மையத்தின் சூறாவளி எச்சரிக்கை மையத்தின் இயக்குனர் என் புவியராசன் கூறினார்.
பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் (Rain) இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும். மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் (Chennai), வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 24 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
ALSO READ: #WeatherUpdate: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது. நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பக கடற்கரை, கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) அதிகமான மழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கும் தெற்கு தமிழ்நாட்டிற்கும் இடையே மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும். சென்னையிலும் மழை பெய்யக்கூடும்.
ALSO READ: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு #COVID19 பரிசோதனை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR