TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியானது? யார் முதலிடம்? எப்படி பார்ப்பது?
TNPSC GROUP 4: தனது கடின உழைப்பின் மூலம் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
TNPSC GROUP 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட் வெளியீடு; முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப் 4 தேர்வுகளை எழுதினார்கள்.
அண்மையில் தமிழ்நாடு அரசு, குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்களை அதிகரித்து 10,117 என அறிவித்தது. இதனால், தேர்வு எழுதியவர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கான முடிவை வெளியிட்டது.
மேலும் படிக்க | TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கியது
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்விற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
தேர்வு முடிவுகளை https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற இணையதள பக்கம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள தேர்வர்கள் ஒரே நேரத்தில் முனைவதால், தேர்வாணைய இணையதளப் பக்கம் முடங்கிய நிலையில், தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது.
தனது கடின உழைப்பின் மூலம் நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மேலும் படிக்க | சிக்ஸ் பேக்ஸ் மோகம்... உயிரை பறிகொடுத்த ஜிம் பயிற்சியாளர்... இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ