இன்றைய COVID-19 நிலவரம்: தமிழகத்தில் 5495 பேருக்கு தொற்று; 76 பேர் மரணம்
இன்று 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,41,649 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் இன்று 5,495 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 978 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,307 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் இன்று 6,227 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,41,649 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 47,110 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 88,562 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 58,19,012 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்: 12-09-2020
கொரோனா பாதிப்பு - 5,495
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 47,110
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 88,562
குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,227
இறப்பு - 76
ALSO READ |
முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கு கொரோனா தொற்று இல்லை!!
கொரோனா வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா?
கொரோனாவை தடுக்க 2,000 மினி மருத்துவமனைகள் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி