கொரோனாவை தடுக்க 2,000 மினி மருத்துவமனைகள் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ஆலோசனை நடத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2020, 01:24 PM IST
கொரோனாவை தடுக்க 2,000 மினி மருத்துவமனைகள் அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி title=

சென்னை: மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறிய விவரங்கள்.

அவர் கூறியதாவது, 

நாட்டில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா (Coronavirus in Tamil Nadu) பரவல் கட்டுக்குள் உள்ளது. 

சென்னையைப் (Chennai Covid-19) பொறுத்தவரை நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.  

தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குக் கீழ் வந்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ |  தேசிய கண்தானம் தினம்: தன்னுடைய கண்களை தானம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டுபிடித்து முன்கூட்டியே சிகிச்சை அளித்ததால் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு. 

மினி கிளினிக்கில் (Mini Clinic) மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம் மற்றும் மக்களை காப்பது அரசின் கடமை.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க முடியாது.

முகக் கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் தொற்று பரவல் அதிகரித்துவிடும்.

ALSO READ |  அரியர்ஸ் தேர்வு: "மனித கடவுளுக்கு வந்த சோதனை" மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?

மெரினா கடற்கரை மற்றும் இறைச்சி வாங்க இடம் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் 

மெரினா (Marina Beach) கடற்கரையில் மக்கள் கூடுவதை காவல்துறையினர் தடுக்க வேண்டும். மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே செல்லக் கூடாது. 

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Trending News