சென்னை: தமிழகத்தில் இன்று 5,956 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,150 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 91 பேர் உயிரிழந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்தது.


அதேநேரத்தில் இன்று 6,008 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 3,55,727 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 52,578 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இன்று 75,100 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 48,13,147 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரம்: 31-08-2020
கொரோனா பாதிப்பு - 5,956
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 52,578
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 75,100
குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,008
இறப்பு - 91


ALSO READ |  அன்லாக் 4-ல் தமிழகம்: வழிகாட்டுதல்களுடன் இங்கெல்லாம் தாழ் திறந்தது!!