தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,34,114 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய டோக்கன் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும், அந்த டோக்கன்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


 


ALSO READ | சேலம், கோவை, திருச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று


இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:


ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4  தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.


ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளுக்கு 7ஆம் தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.