தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து கனமழை பெய்து வருவதன் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பல்வேறு இடங்களில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளியின் விலை கேட்டதும் அதிர்ச்சியடையும் இல்லத்தரசிகளும் தக்காளி வாங்குவதை குறைத்து கொண்டிருக்கிறார்கள். சரியாக ஒரு மாதம் முன்பு ரூ30 முதல் ரூ60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தொடர் மழையின் காரணமாக தக்காளியின் உற்பத்தியில் தடை ஏற்பட்டது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் படிக்க | உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!


இந்நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தையில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, பவித்திரம், எருமப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.


அதன்படி நாமக்கல் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தக்காளி தினசரி லாரிகள் மூலம் நாமக்கல் கொண்டு வரப்படும் நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாகவும் இதன்காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். 



மேலும் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.


இதற்கிடையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,


தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.


2021 வடகிழக்கு பருவமழை காலத்தில், கூட்டுறவுத்துறை நடத்திவரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 2711.2021 முதல் 30.12.2021 வரை 150 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளியும் இதர காய்கறிகள் 1100 மெட்ரிக்டன் அளவிற்கும் ரூ.4 கோடி மதிப்பிற்கு கொள்முதல் செய்யப்பட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.45/- முதல் ரூ.55/- வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90/-முதல் ரூ.120/-வரை வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | நா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! கோலியின் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!


இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுவர்வோர் கடைகள் மூலம் முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி 4 மெட்ரிக்டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டது. அங்கு ஒரு கிலோ ரூ.70/-முதல் ரூ.85/-வரை விற்பனை செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்நடவடிக்கை நாளை முதல் அணைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை துவர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


எனவே, மக்கள் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவான விலையில் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவித்து இருந்தார்.


மேலும் படிக்க | ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR