கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் பழக்க வழக்கங்கள் கல்லூரி மாணவர்களைக் கடந்து தற்போது பள்ளி மாணவர்களிடமும் வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனால் மாணவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களும், எல்லை மீறல்களும், அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு பிரச்சினைகளில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின் பாதை கொலை,கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் சென்று முடிகிறது. தமிழகம் முழுக்க அரங்கேறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் போலீசார் பிடியில், சிறார்கள் சிக்காத ஊரே இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியாகிவிட்டது இன்றைய காலகட்டம். அதுவும் தூத்துக்குடியில் இன்னமும் உச்சம் என்றே சொல்லலாம். ஆம், தூத்துக்குடியில் மட்டும் ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 23 சிறார்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கு இந்த சம்பவமே உதாரணம். கடந்த சில தினங்களுக்கு முன், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவத்தில் இரண்டு இளம் சிறார்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதே போலக் கோவில்பட்டியில் நடைபெற்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொலை வழக்கிலும், ஒரு இளம் சிறார் சம்மந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



மாணவர்களை நல்வழியில் வழிநடத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் , மாணவர்களை தவறான பாதையில் திசை திருப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இதுபோன்ற சம்பவம் சட்டத்தின் கவனக்குறைவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தூத்துக்குடியில் பள்ளிகளின் அருகே சில கும்பல்கள் கஞ்சா விற்று வருவதாகவும் ; அதை தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களிடமே யாரோ சில கருப்பு ஆடுகள் தகவல் தெரிவித்து விடுவதாகவும், அதனால் தற்போது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், மாணவர்களின் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.


மேலும் படிக்க | கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?



தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழித்துக்கட்ட 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் விற்பனை கல்லா கட்டிதான் வருகிறது. சில அரசு அதிகாரிகளே அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே, தண்டனைகள் கடுமையாக்கப்படுவதுடன் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே மாணவர்களின் வாழ்க்கையை மீண்டெடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | தூக்கத்தில் ஆடு என நினைத்து தவறுதலாக ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ