விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு: பணி செய்ய போன இடத்தில் நடந்த பரிதாபம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மணிமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (35) ஆகியோர் சென்றனர்.
இருவரும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாவதாக ராஜேஷ் என்பவர் கழுநீர் தொட்டிக்குள் உள்ளே இறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது ராஜேஷுக்கு விஷவாயு தாக்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கத்திலும் அவர் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ராஜேஷின் கூச்சல் சத்தம் கேட்டு அவரை மீட்க இறங்கிய ஏழுமலை என்பவரையும் விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் (Accidental Death).
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் தாம்பரம் தீயணைப்பு துறையினரின் உதவியோடு பலியான இருவரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் (TN Police) தெரிவித்துள்ளனர்.
ALSO READ | 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி
ALSO READ | கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR