திருப்பத்தூரை அடுத்த  குரிசிலாப்பட்டு  வடுகமுத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32) குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர். அவர் தனது வீட்டின் அருகே ஸ்ரீ காளியம்மன் கோயில் கட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளிலும்  அமாவாசை, பவுர்ணமி போன்ற  தினத்தன்று சிறப்பு பூஜையும் செய்து குறி சொல்லி வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனிவாசனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் லட்சுமி ஏற்கனவே கணவர் சீனிவாசனை  பிரிந்துச் சென்றுள்ளார்.


இந்நிலையில், குரிசிலாப்பட்டு அடுத்த தலுகண் வட்டம் அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு சில வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த மைகண்ணன் மகள் தீபாவை திருமணம் செய்துள்ளார்.


ALSO READ | Student: பள்ளியில் கருகிய நிலையில் மாணவி மீட்பு! ஒற்றை வார்த்தையைச் சொல்லி உயிரிழந்த பரிதாபம்


குடிபோதைக்கு அடிமையான குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி தீபாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் தீபாவின் தம்பியான வெங்கடேசன், தீபா மற்றும் குமார் இருவரையும்  அழைத்துக் கொண்டு பூசாரியான சீனிவாசனிடம் பரிகாரம் செய்து கணவன் மனைவியை சேர்த்து வைக்க அழைத்து வந்துள்ளார். இதனால் தீபாவை அடிக்கடி சந்தித்த நிலையில், பூசாரி சீனிவாசனுக்கும் தீபாவிற்கும்  முறையற்ற காதல் மலர்ந்து, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளார்.


இந்நிலையில் தீபாவின் தம்பியான வெங்கடேசனுக்கும்  ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் வசிக்கும் சேகர் மனைவி மலர் என்கிற பெண்ணுடன் முறையற்ற தொடர்பு சில ஆண்டுகளாக இருந்து வந்ததாக தெரிகிறது. வெங்கடேசன் மற்றும் மலரின் கள்ள தொடர்பு சேகருக்கு தெரிய வர இந்த பிரச்சினையை  தீர்த்து வைக்க வெங்கடேசன் கள்ளக்காதலி மலர் மற்றும் அவருடைய கணவன் சேகர் ஆகிய மூவரும் சேர்ந்து பூசாரியான சீனிவாசனிடம் வந்துள்ளனர்.


ALSO READ | திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!


நமக்குத் தெரிந்தவர் தானே என்ற  முறையில் வெங்கடேசன் மலரை அழைத்து வந்து பிரச்சினையை தீர்க்க சொல்லியுள்ளார். ஆனால் சீனிவாசனும் மலரை அவருடைய கணவரான சேகர் உடனே செல்லும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் தனது அக்காவான தீபாவிடம் முறையற்ற தொடர்பு வைத்துள்ள சீனிவாசன் தனக்கு உதவி செய்வார் என்று மலரை கூட்டி வந்தால் அவருடைய கணவருடன் அனுப்பி வைத்து விட்டார் என்பதால் மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளார். ஏற்கனவே தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை கெடுத்ததாலும் தற்போது தன்னுடைய வாழ்க்கையிலும் தலையிட்டு பிரச்சனை ஏற்படுத்தியதாலும் வண்மம் கொண்ட வெங்கடேசன் பூசாரி சீனிவாசனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.


இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிகாலை சீனிவாசன் கோயில் பூஜைக்கு செல்லும்பொழுது வெங்கடேசனும் அவருடன் கிளீனர் வேலைக்கு உதவிகரமாக இருக்கும் 15 வயது  சிறுவனும் சேர்ந்து ஸ்டெப்னி இரும்பு கம்பியால் சீனிவாசனின் பின் மண்டையில் சராமரியாக தாக்கியதில் துடிதுடித்து இறந்தார்.


இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பூசாரியை படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகளை குரிசிலாப்பட்டு காவல்துறை வலைவீசி தேடி வந்தனர். இருப்பினும் வெங்கடேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. ஆனால் முறையான ஆதாரம் இல்லாததால் இதுவரை குற்றவாளியான வெங்கடேசன் பிடிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 


அதேபோல் வெங்கடேசன் உடனிருந்த 15 வயது சிறுவனின் தொலைபேசி எண்ணை இதுவரை பரிசோதனை செய்ததில் குற்றவாளியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனை அழைத்து காவல்துறையினர் விசாரித்ததில்  வெங்கடேஷுடன் சேர்ந்து கொலை குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.


அதன் காரணமாக  மிட்டூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பதுங்கி இருந்த வெங்கடேஷனையும் தனிப்படைப்பிரிவு சுற்றி வளைத்து பிடித்து சிறுவனை வேலூரில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும்  வெங்கடேசனை  மத்திய சிறையிலும் அடைத்தனர்.


சுமார் பத்து மாதங்கள் கழித்து கள்ளக்காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட பூசாரியின் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR