ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியின் சமையல் அறை அருகே உடல் கருகிய நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்பு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது பாச்சலூர் கிராமம். இங்கு இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன.
பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் குழந்தைகள் தர்ஷினி, பிரித்திகா, பிவின்குமார். இந்த மூன்று குழந்தைகளும் பாச்சலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
Also Read | கொலையா? சாலையோரம் 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரித்திகா வழக்கம்போல் உணவு இடைவேளையின் பொழுது பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, பெற்றோர்கள் மூத்தப் பெண்ணான தர்ஷினியிடம் கேட்டார்கள். தங்கை பிரித்திகாவை உணவு இடைவெளியில் பார்க்கவில்லை என்று தர்ஷினி கூறியுள்ளார்.
உடனே குழந்தையின் பெற்றோர் இருவரும் பள்ளிக்குச் சென்று பார்த்த போது பள்ளியின் அருகே உள்ள சமையலறை அருகே பிரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். பதறிய பெற்றோர்கள் பிரித்திகாவை மீட்டு, அருகில் இருந்த உறவினரின் வாகனத்தில் குழந்தையை எடுத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
செல்லும் வழியிலேயே அப்பா என்று ஒற்றை வார்த்தையை மட்டும் கூறிய குழந்தை உயிரிழந்தார். இதையடுத்து குழந்தையின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாணவி, பள்ளியில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அறிந்த பாச்சலூர் கிராம மக்கள் ஒட்டன்சத்திரம் தாண்டிக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR