முன்விரோதம்.... நடு ரோட்டில் கத்திக்குத்து: பீதியில் மக்கள், இருவர் கைது
அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர், விசாலாட்சி தோட்டம், ‘U’ பிளாக்கில் வசித்து வருபவர் மௌலி. அவருக்கு வயது 25. அவரது தந்தை பெயர் முத்து. மௌலி என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மௌலி மே மாதம் 22 ஆம் தேதி, இரவு, விசாலாட்சி தோட்டம் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் வீரா ஆகியோர் மௌலியை வழிமறித்து தகராறு செய்து, கத்தியால் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
இரத்தக்காயமடைந்த மௌலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேற்படி சம்பவம் குறித்து, E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது. இந்த் அபுகாரின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க | கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
E-4 அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட
1.புருஷோத்தமன், வ/25, த/பெ.ராமச்சந்திரன், ‘X’ பிளாக், விசாலாட்சி தோட்டம், சுப்புராயன் தெரு, மயிலாப்பூர், சென்னை,
2.வீரா, வ/24, த/பெ.முத்து, ‘X’ பிளாக், விசாலாட்சி தோட்டம், சுப்புராயன் தெரு, மயிலாப்பூர்
ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மெளலி ஏற்கனவே எதிரி புருஷோத்தமனின் மைத்துனரை தாக்கியுள்ளதும், இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக புருஷோத்தமன் அவரது நண்பர் வீராவுடன் சேர்ந்து மௌலியை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் எதிரி புருஷோத்தமன் மீது ஏற்கனவே 3 அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது.கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் மே 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் படிக்க | கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ