அண்ணாமலைக்கு இனிமேல் தான் இருக்கு - உதயநிதி ஸ்டாலின் உறுதி
அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் சும்மா விட்டுருவோமா? என பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சித்திரை திங்களான ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக சொத்துப்பட்டியல் (DMKFiles) என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டார். இதற்கு பதில் அளித்த திமுக அமைப்புச் செயலாளர், அண்ணாமலையின் வீடியோவை பார்க்கும்போது காமெடியாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், அண்ணாமலைக்கு 48 மணி நேர கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய அவர், திமுக சொத்து குறித்து ஆதாரங்கள் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் மன்னிப்பு கேட்டு வீடியோவை நீக்க வேண்டும், ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும் படிக்க | அதிமுக நெருப்பு..டச் பண்ணாதீங்க அண்ணாமலை - கடுகடுத்த ஜெயக்குமார்
இதற்கு அறிக்கை மூலம் பதில் அளித்த அண்ணாமலை திமுகவின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என அறிவித்தார். ஆர்எஸ் பாரதி அனுப்பியிருக்கும் நோட்டீஸில் உண்மைக்கு மாறான தகவல்களும், சில விஷயங்களும் மறைத்தும் கூறப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை வெளியிட்ட DMK Files குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள், இது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்டு இருக்கலாமே என ஆதங்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கண்டிப்பாக அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவோம். அதெப்படி சும்மா விட முடியும் என கூறினார். உதயநிதியின் பதிலை பார்க்கும்போது அண்ணாமலையின் டிஎம்கே பைல்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரும் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் முடிவில் இருப்பதுபோல் தெரிகிறது. டிஎம்கே பைல்ஸ் 2.0 வெளியாவதற்கு முன்பு அண்ணாமலை மீது தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பாயலாம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ