Udhayanidhi Stalin Attack Governor R N Ravi: இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் 'தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரிகளை விட்டுவிட்டு பாடிய சம்பவம் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வப்போது தமிழர்களை சீண்டி பார்க்கும் ஆளுநர், தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் தூர்தர்ஷன் தமிழ் (DD Tamil) பொன்விழா ஆண்டு இன்று நடைபெற்றது. அதில் இந்தி மாதம் நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, 'திராவிட நல் திருநாடும்' என்ற வரியை மட்டும் தவிர்த்து விட்டு பாடலைப் பாடிய சம்பவம், தற்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்ப்ட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்தநிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது!. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். 


அவர் தனது சமூக வலைத்தளத்தில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள்.


ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.


யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது #திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்!


சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. 


ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்!


இவ்வாறு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க - 'தமிழகத்திற்கு வள்ளலார் வழியில் நிதி கொடுத்த பிரதமர் மோடி' - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு!


மேலும் படிக்க - உதய் vs பவன்: சனாதன விவகாரம்... பவன் கல்யாண் சவால் - நாலே வார்த்தையில் உதயநிதி சொன்னது என்ன?


மேலும் படிக்க - 1 மணி நேரத்தில் மழை நீர் அகற்றம்! துணை முதல்வர் உதயநிதி பேட்டி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ