திராவிட மாடலை உருவாக்கியது யார்?... இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதி ரிப்ளை
திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள்தான் என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடந்தது. இதில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடினர். மாணவர்களை சந்தித்த அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
பின்னர் மாற்று திறனாளி சிறுவர்களை, இளைஞர்கள் சிலர் பைக்கில் கூட்டிச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தினர். அதனை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இங்குள்ள மாற்றுத்திறனாளிகளிடம் உரையாடிய போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவை முதலாமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவையாக இருப்பதற்கான வேலைகள் கண்டிப்பாக எடுக்கப்படும்.பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக உருவாக்குவது, மற்ற பல கோரிக்கைகள் குறித்து நானும் சட்டபேரவையில் பேசினேன்” என குறிப்பிட்டார்.
அதனையடுத்து திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள்தான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அப்படியா நல்லா இருக்கே என்று சிரித்தபடியே கூறிவிட்டு சென்றுவிட்டார்.
மேலும் படிக்க | திராவிடத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
மேலும் படிக்க | 'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்...' - அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி
மேலும் படிக்க | முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ