திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
விழாவில், அமெரிக்காவைச் சேர்ந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மிசா காலத்தில் தமது உயிரை காத்த கருப்பு சட்டைக்காரர்தான் ஆசிரியர் கி.வீரமணி. திராவிட இயக்கம் கட்சி அல்ல; கொள்கை உணர்வு. அது வளரும். வளர்ந்துகொண்டே இருக்கும். திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” என்றார்,
இதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஆனால் அதிமுக கூட்டணி சிதறிப்போய்விட்டது” என்றார்.
'தமிழர் தலைவர்' மானமிகு @AsiriyarKV அவர்களது 90-ஆவது பிறந்தநாள் விழாவில், தலைவர் கலைஞரின் சொல்லெடுத்து அவரை வாழ்த்தினேன்.
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா சார்பில், ஆசிரியர் பெயரிலான சமூகநீதி விருது இன்று கிடைக்கப் பெற்றது நமது இலக்கை நோக்கிய பயணத்தில் உந்துதலாக இருக்கும்! pic.twitter.com/2DrMGYKU2Z
— M.K.Stalin (@mkstalin) December 2, 2022
நிகழ்வின் இறுதியாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட மாடல் எனும் இரும்புக்கோட்டையில் மோதினால் மண்டை உடையுமே ஒழியுமே கோட்டை சரியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எப்போதும் இந்த அணி பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்தார். என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | 'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்...' - அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி
மேலும் படிக்க | முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ