நான் யாரையும் தவறாக பேசவில்லை - தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்
கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய சில வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்காக, கடந்த சில ஒரு மாதமாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), திமுக வேட்பாளர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தவரிசையில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடியால் தரப்பட்ட "அழுத்தத்தையும் சித்திரவதையையும் பொறுத்துக்கொள்ள முடியாததால்" மறைத்த முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் (Sushma Swaraj) மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) இறந்துவிட்டனர் என உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
மேலும் இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் (Election Commission) நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக (BJP) சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ALSO READ | சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இன்று அந்த அந்த நோட்டிஸுக்கு விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin),"கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய சில வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. என் மீதான் குற்றசாட்டுகளை தான் மறுப்பதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் இது என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர்-தயாரிப்பாளரான உதயநிதி, திமுகவின் (DMK) கோட்டையான சேப்பாக்-திருவல்லிக்கேணி (Chepauk-Thiruvallikeni) தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) ஒரே கட்டத்தில் நடைபெற்றது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR