ஜல்லி கட்டு காளைகள் கொரோனா தடையை தகர்த்தெரியுமா..!!
ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் முக்கிய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வார இறுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில், உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உட்பட பல பகுதிகளில், ஜல்லி கட்டு போட்டிகள் மிக கோலாகலமாக நடக்கும். ஜல்லி கட்டு போட்டிகளுக்கு காளைகளை தயார்படுத்த, அவற்றிற்கு ஊட்ட சத்துக்கள் நிறைந்த பருத்தி விதை, முட்டை, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் வழங்கப்படும். காளைகள் மிகவும் வலுவுடன் பார்ப்பதற்கே பொலிவுடன் தோன்றும்.
களத்தில் நிற்கும் மாடு பிடிக்கும் வீரர்களை திணர அடிக்கும் வகையில் அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
காளைகளை அடக்கும் வீரர்களும் போட்டிக்கு உற்சாகமாக தயாராவார்கள்.
வரும் பொங்கல் திருநாளை ஒட்டி, போட்டிகளுக்கு தயாராகும் காளைகளுக்கும், சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டுவருகின்றன. ஆனால், இந்த காளைகள் தற்போது கொரோனா ( Corona Virus) தடையை தகர்த்து எறியுமா என தெரியவில்லை.
ALSO READ | பகீர் தகவல்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று
போட்டியின் போது சமூக இடைவெளியை பராமரிப்பதில் நடைமுறை பிரச்சனை அதிகம் இருப்பதால், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் முக்கிய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வார இறுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை (Edappadi K Palanisami ) சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜல்லிகட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் சங்கங்களுடன் கலந்தாலோசித்து , போட்டிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அரசாங்கம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஜல்லிகட்டு (Jallikattu) போட்டிகளுக்கு மாடுகளும் இளைஞர்களும் தயாராகி வரும் நிலையில், துள்ளி வரும் ஜல்லிகட்டு காளைகளை அடக்க, தமிழ்நாட்டின் வீர மிக்க மாடி பிடிக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ALSO READ | கொரோனா தடுப்பூசி ஹலாலா ஹராமா.. இஸ்லாமிய மதகுருக்கள் கூறுவது என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR