புது டெல்லி: தகவல் மற்றும் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சராக தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டார். அண்மையில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெற காரணமாக இருந்த முருகனின் முயற்சிகளுக்கு கிடைத்த வெகுமதியாக பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முருகன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் தமிழக அரசியலில் பிரபலமான ஒரு நபராக மாறினார். முன்னதாக தமிழக மாநில பாஜக தலைவராக தமிழிசை சவுந்தராஜன் இருந்தார். 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை தெலுங்கானா மாநில ஆளுநராக (Telangana Governor Tamilisai Soundarajan) நியமித்த பின்னர்,  மாநில பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அந்த பதவிக்கு எல்.முருகன் (L Murugan) நியமிக்கப்பட்டார். ஏறக்குறைய ஆறு மாதம் கழித்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


1977 ஆம் ஆண்டு பிறந்த எல். முருகன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர. அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சட்டத்துறையில் அனுபவம் பெற்றார். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.


ALSO READ | தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்


கொங்கு மண்டலத்தை சேர்ந்த இவர் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஏபிவிபி (Akhil Bharatiya Vidyarthi Parishad) உறுப்பினராகவும் இருந்தார்.


அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு இடங்களை வெல்ல காரணமாக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கான வெகுமதியாக தான் முருகனுக்கான அமைச்சரவையில் பதவி கிடைத்திருக்கிறது என பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக வேட்பாளர்கள் இடம்பெற்றது அவரின் "வேல் யாத்திரை" (Vel Yatra) பயணம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. தற்போது அவர் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் தமிழகத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை தீவிரப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பா.ஜ.க மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற முருகன், வேல் யாத்திரையுடன் பா.ஜ.க.வை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு, திமுகவுக்கு எதிராக பல பிரச்சினைகளையும் எழுப்பியிருந்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டார். 2011 ஆம் ஆண்டில், சேலத்தின் ராசிபுரம் தொகுதியிலும் பின்னர் 2021 தாரபுரத்திலும் போட்டியிட்டார். இரண்டு தொகுதியிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.


ALSO READ | மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்?


முருகன் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளதால், கரூரிலிருந்து போட்டியிட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை மாநில பாஜக தலைவர் பதவிக்கு முன்னணியில் உள்ளார் என்ற தகவல்கள் வருகின்றன.  ஆளும் திமுகவை எதிர்க்க அண்ணாமலை சரியான தேர்வாக இருக்கும் என டெல்லியில் உள்ள மேலிடம் நம்புவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR