கொரொனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் மது அருந்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தடுப்பூசி (Corona vaccine) வரும் 16 ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி நேற்று புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது. அதில் சுமார் 5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு (Covishield) 5.36 லட்சமும் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaccine) தடுப்பூசிகள் 20 ஆயிரமும் கொண்டுவரப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.


இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijayabaskar) கூறுகையில்., "கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் (Tamil Nadu) முதற்கட்டமாக வரும் 16 ஆம் தேதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. மேலும். தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது. அதேபோன்று தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


ALSO READ | தமிழகத்தில் வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: TN Govt அதிரடி!!


ஜனவரி 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்றும், முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசியை போட முடிவு செய்யப்பட்டுள்ளது. 


எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு (Central government) தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. அந்த வகையில், புனேவில் இருந்து 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவருக்கு 30 நாள் இடைவேளையில் 2 முறை தடுப்பூசி போடப்படும் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என தெவிரிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மருந்துகள் குடோனுக்கு சிறப்பு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR