சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்களின் தொடர் கைதுக்கு காரணம் என ஒன்றிய பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்துகிறர் வைகோ... இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 26.10.2022 ஆம் தேதி 555 விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதையும், அவர்கள் கைது செய்யப்பட்டத்தையும் கண்டித்துள்ளார் மதிமுக தலைவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தங்கச்சிமடம் நாலு பனையைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான IND TN 10 MM 365 என்ற எண் கொண்ட விசைப்படகில் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றனர்.


மேலும் படிக்க | திமுக அரசுக்கு இன்னும் 44 அமாவாசைகளே உள்ளது: எடப்பாடி பழனிச்சாமி கணிப்பு 


தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 1.கிளிண்டன் (31), 2.பேதுரு (24), 3.வினிஸ்டன் (50), 4.தயான் (44), 5.மரியான் (28), 6.தாணி (24), 7.ஆனஸ்ட் (24) ஆகிய ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மீனவர்களும், படகும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றது.


கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமைப் பெற்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.


ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் சிங்கள அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது: ஜே.பி.நட்டா 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ