மாவட்ட செயலாளர்கள் யார் பக்கம் என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருக்கும் சூழ்நிலையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓ.பி.எஸ் பக்கம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புயலைக் கிளப்பியுள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாகவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனியாகவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக மாவட்ட செயலாளர்களை இழக்கும் பேச்சுவார்த்தைகளில் இருவரும் மும்முரம் காட்டி வருகின்றனர். இதனிடையே, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் தொடர்ந்து அதிமுக பிரமுகர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | ஓ.பி.எஸ். அனுப்பிய கடிதம் வரவில்லை, திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் - கே.பி.முனுசாமி


இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் பலமுறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், ஆனாலும், தற்போது இடப்பற்றாக்குறை என்ற காரணம் ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்தார். 


சிறப்பு அழைப்பார்களாக அழைக்கவேண்டும் என்று மூத்த தலைவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறினார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக கூறிய வைத்திலிங்கம், இதையெல்லாம் கருத்தில் கொண்டு 23 ம்தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவை தள்ளிவைக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதையே, எடப்பாடி பழனிசாமிக்கு கடிதமாகவும் ஓ.பி.எஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். 


முதலில், அதிமுக கீழ்மட்ட தொண்டர்கள் கொதித்து போய் இருப்பதாகவும், தங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் வைத்திலிங்கம் தெரிவித்தார். இன்னும் இரண்டு நாட்களில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வருவார்கள் என்று பாருங்கள் என்று கூறிய வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த சர்வாதிகார முயற்சி நடப்பதாகவும், அதிமுகவில் பிளவு ஏற்படக் கூடாது என்றும் தெரிவித்தார். 


அதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், இருவரிடையே சரியான தகவலை தெரிவிக்கவில்லை என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கவலைத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக OPS, EPS தரப்பு தனித்தனியாக மனு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR